All Stories

புதிய கொவிட் 19 கட்டபாடுகளை விதித்துள்ள குவைத்

புதிதாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதையடுத்து குவைத் அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை நேற்று விதித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இப்புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய குவைத்தில் உடற்பயிற்சிக்கூடங்கள் மற்றும் அழகுநிலையங்களை மூடுமாறு அறிவித்துள்ளதுடன் ஏனைய வர்த்த நிலையங்களை இரவு 8.00 மணி ​தொடக்கம் காலை 7.00 மணி வரை ஒரு மாதத்திற்கு மூடுமாறும் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரு் 7ம திகதி வரை இத்தடையுத்தரவு நடைமுறைக்கு வரவுள்ளது. எனினும் மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள், உணவுப்பொருள் விற்பனை நிலையங்களுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

உணவகங்கள், மண்டபங்கள் என்பவற்றையும் இரவு 8.00 மணி தொடக்கம் அதிகாலை 7.00 மணி வரை மூடுமாறு உத்தவிடப்பட்டுள்ளதுடன் கொண்டாட்டங்கள், ஒன்றுகூடல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலையிழக்கும் குவைத் அரச துறையில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள்

பொதுத்துறையில் பணியாற்றும் வௌிநாட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்க குவைத் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

​பொதுத்துறையில் 100 வீதம் குவைத் பிரஜைகளை உள்வாங்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என குவைத் வர்த்தக மற்றும் வர்த்தக அமைச்சர் பைசல் அல் மெட்லெஜ் தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டு ஆசிரியர்களை நீக்கும் குவைத்

ஆசிரியர்களாக பணியாற்றிய வௌிநாட்டவர்களில் 54 சதவீதமானவர்கள் குவைத்துக்கு வௌியே சிக்கியுள்ளனர். அவர்களில் வதிவிட அனுமதி காலாவதியானவர்கள் மறுபடி வரத்தேவையில்லை என குவைத் கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியாளர்களின் டிஜிட்டல் கருவி

Image