ஜப்பானில் தொழில்வாய்ப்பை நாடி செல்ல விரும்பும் இளைஞர் யுவதிகளுக்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்க இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முன்வந்துள்ளது.
All Stories
புதிதாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்புப் சேவை ஊழியர்களாக (care givers) வௌிநாடுகளில் பணியாற்ற விரும்பும் இலங்கையர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளதாக இலங்கை வௌியாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே கடவுச்சீட்டுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வௌிநாடு செல்லும் ஆர்வத்துடன் உள்ள இளைஞர் யுவதிகள் போலி இடைத்தரகர்களிம் சிக்கி ஏமாற வேண்டாம் என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
கட்டாரில் வெளிநாட்டவர்களுக்கும் வதிவிட அனுமதி உள்ளவர்களுக்குமான குடிவரவு, குடியகல்வுகளை ஒழுங்கு படுத்தும் 2015/21ம் இலக்க சட்ட விதிகளை மீறிய வெளிநாட்டவர்கள், அதனை நிவர்த்தி செய்து கொள்வதற்கான அறிவித்தல்
தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் (Dose) செலுத்திக்கொண்ட இலங்கை பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு வர முடியும் என்று கட்டார், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
குறைவான ஊதியம், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் அவுஸ்திரேலியாவில் பணியாற்றுகின்றனர் என்று அந்நாட்டு இணையதளமான www.sbs.com.au செய்தி வௌியிட்டுள்ளது.
வெளிநாட்டு பணவனுப்பல்களை வசதிப்படுத்துவதற்கு 'ளுடு-சுநஅவை' மொபைல் செயலியினை நடைமுறைப்படுத்தல் தொடர்பான அறிவித்தலை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
வெளிநாட்டு பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை அதிகரிக்கின்ற அதேவேளை முறைசாரா வழிகளின் பயன்பாட்டை ஊக்கமிழக்கச் செய்யும் குறிக்கோளுடன் புதிய, குறைந்த செலவு பணவனுப்பல் வழிகளை அறிமுகப்படுத்துவதற்கான தேவையினை இனங்கண்டு, இலங்கைக்கென புதிய பணவனுப்பல் வழிகளை ஆய்வுசெய்து ஆலோசிப்பதற்கும் பணவனுப்பல் செய்யப்படுகின்ற செலவினைக் குறைப்பதன் மீது பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் இலங்கை மத்திய வங்கி பணியாற்றுக் குழுவொன்றினை நியமித்தது.
இலங்கை வங்கி, மக்கள் வங்கி, சம்பத் வங்கி, கொமர்ஷல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி, ஹட்டன் நஷனல் வங்கி, ஹொங்கொங் அன்ட் சங்காய் வங்கி, கார்கில்ஸ் வங்கி, டயலொக் எக்ஸியாட்டா, மொபிட்டல் (பிறைவேட்) லிமிடெட் மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பவற்றிலுள்ள அனுபவம்பெற்ற தொழில்சார் நிபுணர்களை இப்பணியாற்றுக் குழு உள்ளடக்குகின்றது.
இலங்கைக்கு அதிக பணவனுப்பல்களைக் கவர்வதற்கு பயனர்கள் சுயமாகப் பதிவுசெய்தல், எந்தவொரு நாட்டிலிருந்தும் பணவனுப்பல்களை வசதிப்படுத்துவதற்கு உலகளாவிய பணப் பரிமாற்றல் தொழிற்படுத்துநர்கள் மற்றும் உலகளாவிய நிதியியல் தொழில்நுட்பங்கள் என்பவற்றுடன் இணைவதற்கான இயலுமை, இலங்கையிலுள்ள ஏதேனும் வங்கிக் கணக்கிற்கு/மொபைல் பணப்பைக்கு உடனடி நிதிப் பரிமாற்றல் போன்ற அம்சங்களுடன்கூடிய “SL-Remit” என்று பெயரில் தேசிய பணவனுப்பல் மொபைல் செயலியொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு பணியாற்றுக் குழு முன்மொழிந்துள்ளது. இதற்கு மேலதிகமாக, இச்செயலி நேரடி பட்டியல் கொடுப்பனவுகள், கவர்ச்சிகரமான வெளிநாட்டு செலாவணி வீதங்கள், குறைவான கொடுக்கல்வாங்கல் கட்டணங்கள் போன்ற பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளை உள்ளடக்கியிருக்கும்.
நிதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, இலங்கை வங்கியாளர்கள் சங்கம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட் ஆகியன உள்ளடங்கலாக ஆர்வலர்களின் உதவியுடன் இலங்கை மத்திய வங்கி “SL-Remit” மொபைல் செயலியினை தற்பொழுது நடைமுறைப்படுத்தும்.
வௌிநாடு செல்லும் நோக்கில் பதிவு செய்தவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளை (07) ஆரம்பிக்கப்படவுள்ளது.
முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரயாணிகளுக்கு தமது நாட்டு எல்லை எதிர்வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி தொடக்கம் திறக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தள்ளது.
பெலாரஸ் - லித்துவேனியா எல்லைப் பகுதியில் 29 வயது இலங்கையர் ஒருவருடைய சடலம் அடையாளங்காணப்பட்டுள்ளதாக பெலாரஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை விதிக்கப்பட்டிருந்த வீசா கட்டுப்பாடுகளை நீக்க குவைத் தீர்மானித்துள்ளது.