கட்டாருக்கான இலங்கை தூதரகம் எதிர்வரும் 22ம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
All Stories
அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் ஐரோப்பாவின் பாதி மக்கள் தொகை ஒமிக்ரான் கோவிட் திரிபினால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஏற்றுமதி வருமானத்தை மாற்றுவதற்கான விதிகள், தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குப் பொருந்தாது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
ஐரோப்பாவில் நாளாந்த கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் மிக அதிகமான நோயாளர்கள் பிரான்ஸில் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் பல நாடுகளில் கொவிட் 19 தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சர்வதேச விமான சேவைகளுக்கான புதிய வழிகாட்டியினை பஹ்ரைன் அரசாங்கம் வௌியிட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களினால் இலங்கைக்கு அனுப்பப்படும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 240 ரூபா வரை அதிகரிக்குமாறு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
அமைச்சரவையில் இந்த யோசனையை தான் முன்வைத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து பணம் தற்போது கிடைப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
கறுப்பு சந்தையில் 240 முதல் 245 வரையான பெறுமதியில் டொலர் மாற்றப்படுவதாகவும், வங்கிகளில் 203 ரூபாவிற்கே டொலர் மாற்றப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
203 ரூபாவிற்கு டொலரை மாற்றுவதற்கு எந்தவொரு புலம்பெயர் தொழிலாளர்களும் விரும்புவதில்லை என்பதால், தான் இந்த யோசனையை முன்வைத்ததாக நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.
அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் ஒமிக்ரோன் பரவல் அதிகரித்துள்ளதுடன் சுமார் 10,000 பேர் வரை ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வார இறுதியில் 1000 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என்று ஓமான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கட்டாரில் சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கான சலுகை காலம் மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவின் அபுஜாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் மற்றும் சைப்ரஸின் நிக்கோசியாவில் உள்ள இலங்கையின் துணைத்தூதரகம் போன்ற வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்கள் / பணிமனைகளை 2021 டிசம்பர் 31ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடுவதற்கு வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.
டுபாயில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய சந்தேகத்தின் பேரில் 37 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் வெலிகம பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடு ஒன்றில் உள்ள இலங்கை பாடசாலையில் ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் தொழில்புரிகின்றவர்களினால் நாட்டிற்கு அனுப்பப்படும் பணத்திற்கு மேலதிக ஊக்குவிப்புத் தொகை வழங்கும் காலத்தை நீடித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.