ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி

ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி

ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு தருவதாக கூறி பல இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடையவராவார்.

இவர் அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அநுராதபுரம் பிரதேசத்திலுள்ள  பெண் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றிற்கு  இது தொடர்பில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இதனையடுத்து அதிகாரிகள் அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் சந்தேக நபரின் வெளிநாட்டு பயண அனுமதியும் தடை செய்யப்பட்டுள்ளது.

இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று (19) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறையில் வைக்க நீர்கொழும்பு பதில் நீதிவான் இந்திக சில்வா உத்தரவிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image