வெளிநாட்டவர்களுக்கான வீசா விண்ணப்பங்களை இணையவழியில் சமர்பிக்க அங்கீகாரம் பெற்ற பிரதிநிதி!

வெளிநாட்டவர்களுக்கான வீசா விண்ணப்பங்களை இணையவழியில்  சமர்பிக்க அங்கீகாரம் பெற்ற பிரதிநிதி!

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான வீசா விண்ணப்பங்களை இணையவழி முறையின் ஊடாக சமர்பிப்பதற்கு அங்கீகாரம் பெற்ற பிரதிநிதி ஒருவரை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கைக்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்கான வீசா விண்ணப்பங்களை இணையவழி மூலமாக விண்ணப்பிப்பதற்காக அதிகாரமளிக்கப்பட்ட முகவர் ஒருவரை நியமித்தல் 

இலங்கைக்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்கான வீசா விண்ணப்பங்களை இணையவழி மூலமாக விண்ணப்பிப்பதற்காக அதிகாரமளிக்கப்பட்ட முகவராகக் கடமையாற்றுவதற்கு GBS Technology Services & IVS Global – FZCO மற்றும் VFS VF Worldwide Holdings Ltd இனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவை மதிப்பீடு செய்வதற்காக மதிப்பீட்டு குழுவொன்று 2023.09.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நியமிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சட்டமா அதிபரின் அவதானிப்புக்களுக்கமைய வரைவாக்கம் செய்யப்பட்டுள்ள குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image