கத்தார் பயணிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெளிநாடுகளில் இருந்து கத்தாருக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கைசெய்தியொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது கத்தாருக்கு பயணிக்கும் போது போதை அல்லது மனோவியல் பொருட்கள் கொண்ட (containing narcotics or psychotropic substances) மருந்துப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்றாலும் உரிய மருத்துவ அதிகாரிகளினால் நோயாளிகளுக்கு கடந்த 6 மாதங்களில் பரிந்துரை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் மருந்துப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்பதாக கத்தார் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கத்தாருக்குள் கொண்டுவரப்படும் மருந்துப் பொருட்கள் அந்தந்த நாடுகளில் அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும், கத்தாரில் தடைசெய்யப்பட்டதாக இருக்கலாம். எனவே மருந்துப் பொருட்களை எடுத்துவரும் நபர்கள் மிகவும் அவதானமாக செயற்படும் படியும், மீறி கத்தாருக்குள் கொண்டு வரப்பட்டால், சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படலாம், அல்லது தாயகத்திற்கே மீள திரும்பி அனுப்பப்படலாம் என்பதாக கத்தார் போதைப் பொருள் ஒளிப்பு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கத்தாரில் தடைசெய்யப்பட்டுள்ள மருந்துப் பொருட்களின் பட்டியல் PDF FILE
மூலம் - கத்தார் தமிழ்