மே தினம்: வடமாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் அறிவிப்பு!

மே தினம்: வடமாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் அறிவிப்பு!
மே தினம் தொடர்பில் வட மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அறிவித்தல் வெளியிட்டுள்ளது.
 
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த சங்கத்தின் பிரதிநிதிகள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
 
வடமாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனமானது பன்னிரு தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்ககட்டமைப்பாகும்.
 
கடந்த நான்கு வருடங்களாக பல்வேறு தொழில்சார் பிரச்சனைகளை கையாண்டும், தீர்வுகளைப்பெற்றுக்கொடுத்தும், தொழிலாளர் உரிமைக்காக போராட்டங்கள் , குரல்கள் கொடுத்தும் வருகின்றோம்.
 
இக்காலப்பரப்பில் இரண்டு மே தினங்களை நடாத்திய நாம் இம்முறை கூட்டு மேதினக் கோரிக்கையை சிவில் சமுக செயற்பாட்டாளர்களின் கோரிக்கைக்கமைவாக பரிசீலித்தோம்.
 
அதேசமயம் அம்முயற்சியின் பொருட்டு பலகட்ட சந்திப்புக்கள் பலதளங்களில் முன்னெடுக்கப்பட்டன யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரான எமதுமண்ணில் வலுவான மேதின அறைகூவலை மேற்கொள்ள நாம் பரிபூரண ஆதரவை வெளிப்படுத்தியிருந்தோம்.
 
இருப்பினும் நாம் சம்மேளனமாக பங்கேற்பதில் சிலதரப்பினர் குறுகிய சிறுபிள்ளைத்தனமான சிந்தனையுடன் குறுகிய வட்டத்தில் எம்மை உட்படுத்தி ஆட்சேபனையை வெளிப்படுத்தியதால் நாம் தனித்து இம்மேதினத்தை வடமாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனமாக. எமது தொழிற்சங்க உரிமைகளையும், எம் இனத்தின் வேணாவாக்களையும் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளவுள்ளோம்.
 
இந்த மேதின கூட்டத்திற்கு சகல சிவில் சமுக குழுக்கள் மற்றும் சிவில்சமுக செயற்பாட்டாளர்கள், வடமாகாண தொழிற்சங்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும்  பங்குபற்றுமாறு  அழைக்கின்றோம்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image