All Stories
கடந்த காலங்களில் நாட்டில் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அவைத்தலைவர் காரியாலயத்தில் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று புதன்கிழமை (08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மிகவும் தாமதமாகவும் பயனற்ற முறையிலும் செயற்படுத்தப்பட்டது.
எனவே, புதிய அரசாங்கத்தின் தலைமையில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் உரிய நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதில் ஏற்படும் தடைகள் தொடர்பில் ஆராய்ந்து விசாரணைகளை நடத்தவும் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு புதிதாக குறிப்பிட வேண்டிய அவசியம் கிடையாது.
நாடு முழுவதும் சுமார் 30,000 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித வௌியிட்ட அறிக்கை காரணமாக, தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, 500 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறு கோரி அறிவித்தல் அனுப்ப இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் முதற்தடவையாக 9.3 வீதமாக அதிகரித்துள்ளதை தெரிவிப்பதில் நான் பெருமையடைகிறேன்.
கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள போலி வைத்தியர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசாங்க ஊழியர்களின் சேவைக் காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் பணிகளில் ஈடுபடுவதற்காக சம்பளம் அற்ற விடுமுறையை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
பல்கலைக்கழக கட்டமைப்பில் காணப்படும் மாணவர் நலன்புரி பிரச்சினைகள் தொடர்பில் துரித கவனம் செலுத்தப்பட வேண்டும் - உயர் கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன