உலக தொழில் சந்தையில் தொழில்வாய்ப்பு எவ்வாறுள்ளது? அதற்காக இலங்கையர்களுக்கு இருக்க வேண்டிய தகைமைகள் என்ன? என்பது குறித்து தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
All Stories
பிரித்தானியாவில் தற்போது நடைமுறையிலுள்ள பல கொவிட் 19 தடுப்பு விதிமுறைகள் விரைவில் தளர்த்தப்படும் என தாம் நம்புவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
வௌிநாட்டு தொழில்வாய்ப்பை நாடவுள்ள பிரஜைகளுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்க தீர்மானித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கொரிய தொழில்வாய்ப்பு கோட்டா குறைடைந்துவிட்டதா என்பது தொடர்பி;ல தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விளக்கமளித்துள்ளார்.
சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு, கடந்த 14 நாட்களுக்கு பயணித்தவர்கள், இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை, இன்று முதல் சில நிபந்தனைகளின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.
மியன்மார் பணிப்பெண் ஒருவரை, பட்டினியினிட்டு சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில், குற்றவாளியாக காணப்பட்ட சிங்கப்பூர் பெண் ஒருவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கை வருவதற்கு தற்காலிக தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என கொவிட் 19 தடுப்புக்கான தேசிய நிலையம் அறிவித்துள்ளது.
டெல்டா திரிபு வைரஸ் பரவலுடன் கொவிட் 19 நான்காம் அலை மிக வேகமாக ஆரம்பிக்கும் அபாயம் தோன்றியுள்ளதாக போர்த்துக்கல் அச்சம் வௌியிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புகின்றவர்களுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு தளர்த்தப்படுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
இலங்கைக்கு வருகைத்தரும் வௌிநாட்டவர்கள் மற்றும் வௌிநாட்டவர்களுக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிகள் வௌியிடப்பட்டுள்ளன.
உலகின் மிகப் பெரிய பிசிஆர் பரிசோதனைக் கூடத்தை டுபாய் அதன் விமான நிலையத்தில் நிறுவியுள்ளது.
இரண்டாம் நுழைவாயிலுக்கு அண்மித்து 20,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாய்வுக்கூடம் திறக்கப்படவுள்ளது
உலக சுகாதார தாபனத்தின் புதிய தரத்திற்கமைய நவீன உபகரணங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வாய்வுக்கூடத்தில் ஒரு நாளைக்கு 100,000 இலட்சம் மாதிரிகளை பரிசோதனை செய்து சில மணி நேரங்களில் முடிவுகளை வழங்கக்கூடிய வசதிகள் காணப்படுகிறது என டுபாய் விமான நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டுபாய் விமான நிலையம் அந்நாட்டு சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து திறக்கப்படவுள்ளதாக நேற்று அறிவித்திருந்தது.
மேலும் குறித்த ஆய்வுகூடத்தில் நேர்எதிர் மற்றும் நேர்மறை அழுத்த அறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அவை நேரடியாக அரச அறிவிப்பு தளங்களுடன் தொடர்புபட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாத்துறைக்கு அப்பால் உலகின் மிக பரப்பபரப்பான வர்த்தக போக்குவரத்து மையமாக காணப்படும் டுபாய் விமானநிலையத்தை பாதுகாப்பான போக்குவரத்துக்கு உகந்ததாகவும் சுகாதார வழிமுறைகளுக்கு உகந்ததாகவும் மாற்றியமைக்கபபடுவதே நோக்கம் என விமான நிலையத் தலைவர் ஷீக் அஹமட் பின் ஷஹீட் அல் மக்டோம் தெரிவித்தார்.