புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை வௌியிட்டது ஓமான்

புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை வௌியிட்டது ஓமான்

வௌிநாடுகளில் இருந்து தரை, கடல் மற்றும் விமான நிலையங்களூடாக மார்க்கமாக ஓமான் வருகைத்தரும் அனைவருக்கும் நிறவன தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரச தொடர்பாடல் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அந்நாட்டு தொடர்பாடல் மத்திய நிலையம் ஓமானுக்குள் நுழைய முதலும் அதற்குப் பின்னரும் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் வருமாறு,

ஓமானுக்குள் குறுகிய பயணங்களுக்குள் நுழைவதற்கு 72 மணி நேரத்திற்கு அதிகமாகாமலும், எட்டு மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரம் எடுக்கும் நீண்ட பயணங்களுக்கு 96 மணி நேரத்திற்கு அதிகமாகாமலும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு நேர்மறையான முடிவுகளை பெற்றிருத்தல்.

ஓமான் விமான நிலையத்திற்குள் நுழைந்ததும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளல்.

இலத்திரனியல் வலயம் அணிவிக்கப்பட்டு 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபடல்

வருகைத் தந்த நாளில் பிசிஆர் முடிவு நேர் எதிராக இருப்பின் எட்டாவது நாள் மீண்டும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளல். சோதனை முடிவுகள் நேர் எதிராக இருப்பின் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேற முடியும்.

வருகைத் தந்த நாளில் பரிசோதனை முடிவு நேர்மறையாக இருப்பின் 10 நாள் தனிமைப்படுத்தலின் பின்னர் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

எனினும் குறிப்பிட்ட தொகுதியினர் அவர்களின் உடல்நிலைகளைப் பொருத்து வீட்டுத் தனிமைப்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், நோயினால் பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் பயண சிகிச்சைக்குட்படுத்தப்பட்டவர்கள் போன்றோர் மருத்துவ சான்றிதலை சமர்ப்பித்து வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கான அனுமதியை பெறலாம். 15 மற்றும் அதற்கு குறைந்த வயதுக்கு குறைந்தவர்கள் இலத்திரனியல் காப்பு மற்றும் பிசிஆர் பரிசோதனையின்றி விட்டுத்தனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயணிகளுக்கான நிறுவன / வீட்டுத் தனிமைப்படுத்தல்களாவன 7 நாள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுபவர்களுக்கு எட்டாவது நாள் பிசிஆர் பரிசோதனை செய்யப்படும். தொற்றுள்ளவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். 14வது நாள் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அந்நாட்டு அரச தொடர்பாடல் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image