வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறைசேரிக்கு 7 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறைசேரிக்கு 7 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறைசேரிக்கு 7 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று (29) இடம்பெற்ற முக்கிய சந்திப்பின் போது தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, 4 பில்லியன் ரூபா காசோலையை திறைசேரியிடம் கையளித்தார்.

தொழில் அமைச்சின் கீழ் செயல்பட்டுவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால்  (SLBFE,) இந்த ஆண்டு பெறப்பட்ட  மொத்த வருமானத்தின்  7 பில்லியன் ரூபா திiசேரிக்கு   பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது   அமைச்சின் செயலாளர் திரு. ஆர்.பி.ஏ. விமலவீர SLBFE, இன் தலைவர் ஹில்மி அஸீஸ் மற்றும் ஏனைய சிரேஷ்ட பிரமுகர்கள் உட்பட அமைச்சின் முக்கிய அதிகாரிகள் பலர்  கலந்துகொண்டனர்.
இதன் போது, அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட 2023 நடவடிக்கையின் காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டதாக இதன் போது குழுவினர் தெளிவுபடுத்தினர்.

7 பில்லியன் ரூபாவில் 3 பில்லியன் ரூபா இதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டதுடன், அந்த வேளை மாஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு மருந்து கொள்வனவுக்காக 100 மில்லியன் ரூபாவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அமைச்சினால் தற்போது அமுல்படுத்தப்படும் முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினார்.  கரு சரு திட்டத்தின் ஊடாக இலங்கையின் முறைசாரா துறையில் பணிபுரிவோருக்கு தொழில்  கௌரவத்தை வழங்கி ,அவர்களை சமூக பாதுகாப்பு திட்டங்களில் இணைப்பதுடன்,  தொழில் சந்தை தொடர்பான தகவல் அமைப்புடன் அவர்களை ஒன்றிணைக்கவும் விரும்புவதாகவும் அமைச்சர  ஜனாதிபதியிடம்  தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்களின் சங்கங்கள் இணைந்து நாட்டிற்கு பணம் அனுப்புவதை அதிகரிப்பது குறித்தும் அமைச்சர் விளக்கமளித்ததுடன்,.மின்சார கார்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி முறை அறிமுகம், ஸ்மார்ட் கிளப் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் தொழில் வழிகாட்டல் பணிகள் குறித்தும் அமைச்சர் இதன்போது ஜனாதிபதியிடம் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த 18 மாதங்களில் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணமாகப் பெறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஓய்வூதியத் திட்டம் மற்றும் வேலைவாய்ப்பிற்காக பணம் அனுப்புவதற்கான வழிமுறைகள் அமைப்பது குறித்தும் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

இலங்கைக்கு அந்நிய செலாவணி வருவதற்கான முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணப்பரிமாற்றங்களை குறிப்பிட்ட ஜனாதிபதி, அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் குறித்தும் தனது மகிழ்ச்சியையும் தெரிவித்தார். தொழில் சட்டங்களில்  சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் ஜனாதிபதி,  பாராட்டினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image