வீட்டு வேலைக்காக பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்தத் திட்டம்

வீட்டு வேலைக்காக பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்தத் திட்டம்
இலங்கைப் பெண்களை பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் அமைப்புகளுக்கு நேற்று முன்தினம் (20) இதனை அவர் தெரிவித்துள்ளார்.
 
பெண்களை வீட்டுப்பணிப் பெண்களாக அனுப்புவதை நிறுத்திவிட்டு அதிக சம்பளம் பெரும் தொழில்களுக்கு பயிச்சிகளை வழங்கி அனுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
 
அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் போது பத்து வருடங்களுக்குள் வீட்டுப்பணிப்பெண்களை வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வதை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான பிரேரணையை தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டுமென துறைசார்ந்த சகல தரப்பினருக்கும்  அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image