பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நவம்பர் மாதம் 9ம் திகதி தொடக்கம் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலக சேவை சுற்றுநிருபம், 5/7 பதவி உயர்வு சுற்றுநிருபம் என்பவற்றை 4 மாதங்களாக செயற்படுத்தாமை, மருந்துகளின் விலை அதிகரிப்பு, தேவையில்லாத செலவுகளை மேற்கொண்டு அவசியமான சேவைகளை இல்லாமலாக்கல், சுகாதார செயலாளரின் முகாமைத்துவ பலவீனம், சுகாதார நிருவாக சேவையை ஸ்தாபித்தல், அலுவலக சேவை சுற்றுநிருபத்தை உடனடியாக வௌியிடல், 5/7 பதவி உயர்வுக்கான சுற்றுநிருபத்தை உடனடியாக வௌியிடல், மருந்து விலை குறைத்தல், கமிஷனுக்காக அவசியமற்ற பொருட்களை கொள்வனவு செய்தல், தேவையற்ற பரிசோதனை செலவுகளை நிறுத்தல், சுகாதார கடன்களை உடனடியாக செலுத்தல், குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் குழந்தைகளின் சுகாதார தரத்தை உடனடியாக உறுதி செய்தல், ஆகிய விடயங்களை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.