ஊடகவியலாளர்களுக்கு இணையத்தளம்

ஊடகவியலாளர்களுக்கு இணையத்தளம்
ஊடகவியலாளர்களுக்கு www.garusaru.lk இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

 இரத்தினபுரி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு www.garusaru.lk என்ற இணையத்தளத்தை அறிமுகப்படுத்தி அதில் அவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இரத்தினபுரி வெரலுபே செஞ்சுரியா ஹோட்டலில் நேற்று (28) நடைபெற்ற ஜெயகமு ஸ்ரீலங்கா - ஊடகவியலாளர் மாநாட்டில் இடம்பெற்றது.

இந்த இணையதளத்தில் பதிவு செய்யும் ஒவ்வொரு ஊடகவியலாளர்களுக்கும் ஒரு QR குறியீடு கிடைக்கும், இதனால் அவர்கள் தங்கள் வேலையை எளிதாக மேற்கொள்ள முடியும்.
 
முறைசாரா தொழிலாளிகளுக்கு தொழில் கௌரவத்தை வழங்கும் 'கரு சரு' வேலைத்திட்டத்தில் தொழிலாளர்களை இணைத்து உருவாக்கப்பட்ட www.garusaru.lk இணையத்தளத்தின் அறிமுகம் நேற்று இரத்தினபுரியில் ஆரம்பமான 'ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவை'யில் இடம்பெற்றது.
 
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் என்னக்கருவின் பிரகாரம் 'கரு சரு' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image