மரணித்து வரும் பொருளாதாரத்திற்கு மூச்சுக் காற்றை வழங்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்குக!

மரணித்து வரும் பொருளாதாரத்திற்கு மூச்சுக் காற்றை வழங்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்குக!

'டொலர் இல்லை'. இது நாட்டின் பெரிய இடங்களில் இருந்து சிறிய இடம் வரையிலும் அனைவரும் பழக்கத்தில் சொல்லும் ஒரு கதையாகும்.

கொவிட் 19 தொற்றுடன் சுற்றுலாத்துறை வீழ்ச்சிக்குள்ளாகி எமது பிரதான அந்நிய செலாவணி வருமான மார்க்கம் இல்லாமற் போனது. ஆனாலும் நாட்டின் இரண்டாவது பிரதான அந்நிய செலாவணி வருமான மார்க்கமான புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கின்ற வருமானத்திற்குப் புண்ணியமாகப் போக நாட்டின் பொருளாதாரம் இன்னமும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றது.

ஆனாலும் அவ்வாறான நாடொன்றில் வாழ்க்கின்ற புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த நாட்டிற்கு அனுப்புகின்ற பணத்திற்கு இந்நாட்டில் பெறுமதியைச் சேர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதாகத் தெரியவில்லை. ஆனாலும் அதற்காக அரசாங்கம் அவர்களது RFC கணக்குகளில் இருந்த பணத்தை எவ்வித முன்னறிவித்தலும் இன்றி ரூபாய்க்கு மாற்றியிருந்தது என்றும் அண்மையில் செய்தியொன்று சமூக ஊடகங்களில் பிரசுரமாகியிருந்தது.

இவ்வாறானதொரு நிலைமையில் கடந்த டிசம்பரில் இந்நாட்டிற்குக் கிடைக்கின்ற அந்நிய செலாவணி தீர்வைகள் 317.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்திருந்தது என்றும் அறியக்கிடைத்தது.

மொத்தத்தில் இந்த நிலைமையினுள்ளே 2020ம் ஆண்டின் முதல் 11 மாத காலப்பகுதியினுள்ளே தீர்வைகளின் பெறுமதியான 6291.2 மில்லியன் டொலர் தொகையானது 2021ம் ஆண்டின் முதல் 11 மாத காலப்பகுதியினுள்ளே 5166.3 மில்லியன் டொலர் வரை 17.9% வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இது பொருளாதார ரீதியாக பாதகமான நடத்தையாகும்.

இவ்வாறானதொரு நிலைமையில் புலம்பெயர் தொழிலாளர்கள் இந்நாட்டிற்கு அனுப்புகின்ற ஒரு டொலருக்கு 10 ரூபாவை மேலதிகமாக செலுத்துவதாக மத்திய வங்கி அறிவித்தாலும் கூட, வங்கியல்லாத முறையில்லா வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களின் மூலம் ஒரு டொலருக்கு சுமார் 240 ரூபாய் அளவில் வழங்கப்படுவதாக அறியப்படுகின்றது. அத்தொகையானது வங்கிகளினால் செலுத்தப்படும் பணத்தை விடவும் முப்பது ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையாகும்.

அவ்வாறே வெளிநாடுகளில் உள்ள பணப்பரிமாற்ற நிலையங்களில் இந்நாட்டு வங்கிகள் செலுத்துகின்ற தொகையினை விடவும் அதிக தொகையாகும். அதற்கமைய விளங்குவது யாதெனில், அரசாங்கம் புலம்பெயர் தொழிலாளர்களின் வருமானத்தினை கேவலப்படுத்துகின்றது என்பதல்லவா?

தேர்தல்களின் போது தமது வாக்குப் பெட்டிகளை நிரப்பிக் கொள்ள பெரும் வீரர்களாகக் காட்டிக் கொண்ட தற்போதைய அரசாங்கம், வெளிநாடுகளில் பெரும் இன்னல்களுக்குள்ளாகி, தமது குடும்பங்களின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்காக அனுப்பிவைக்கின்ற குருதி, வியர்வை என்பன படிந்த டொலர்களை அவர்களுக்கே தெரியாமல் ரூபாய்கள்களாக மாற்றுகின்ற நிலைமைக்கு வந்துள்ள பொருளாதாரத்தினை ஏற்படுத்தியமைக்கு பொறுப்புக் கூறவேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொரு அரசாங்கமும் மாறி மாறி மரணத்தின் வாயிலுக்குள் கொண்டு சென்ற, அந்நிய செலாவணி பற்றாக்குறையில் உள்ள பொருளாதாரத்திற்கு உயிரழிப்பது புலம்பெயர் தொழிலாளர்களின் வருமானத்தின் மூலமாகவே என்பதனை வேண்டுமென்றே மறந்துவிட்டாகும்.

நாம் அதனைக் காண்பது எவ்வாறென்றால், புலம்பெயர் ஊழியர்களின் உரிமைகள் தொடர்பில் கடுகளவும் கரிசனையில்லாத ஓர் அரசாங்கத்தின் செயற்பாடுகளின் மற்றுமோர் பக்கமாகவேயாகும். ஏனென்றால், புலம்பெயர் தொழிலாளர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கெதிராக அரசாங்கம் எவ்வாறு தலையீட்டை மேற்கொள்ள வேண்டும்.? என்பது தொடர்பில் எடுத்துக்காட்டி 2018, 2021ம் ஆண்டுகளில் தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் என்பன ஒன்றிணைந்து கையளித்த தேசிய கொள்கையினை இரண்டு அரசாங்கங்களுமே அந்த புதினப் பெட்டியில் போட்டுவைத்துள்ள பின்னணியிலாகும்.

இவற்றிற்கெல்லாம் நடுவே குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக அன்றாடம் குவியும் வரிசைகளில் இருந்து தெரிய வருவது எதிர்காலத்தில் மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகரிக்கின்றமை தானே? அவ்வாறாயின் அவர்களுக்கும் கூட இதே தலைவிதியை ஏற்படுத்துவதா அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரல் என்று நாம் வினவ விரும்புகின்றோம்.
அதனால் இனிமேலும் அரசாங்கம் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது உரிமைகளை கவனியாது விடுகின்றமையினை நாம் கடுமையாக ஆட்சேபிப்பதுடன், அவர்களது உரிமைகளை உறுதிப்படுத்த தேசிய கொள்கையொன்றை உருவாக்குமாறும், புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற சிவில் அமைப்புக்களுக்கும் அதற்கான சட்டரீதியான உரிமையொன்றை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்தினை வற்புறுத்துகின்றோம்.

PROTECT சங்கம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image