திரவப் பால் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம்!

திரவப் பால் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம்!

சந்தையில் திரவப் பால் பற்றாக்குறை ஏடுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

திரவப் பால் பொதியிடலுக்கு பயன்படுத்தப்படும் பொதிகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த வரியை நீக்குமாறு பல தடவைகள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அச்சபை சுட்டக்காட்டியுள்ளது.

பால் மா இறக்குமதி செய்யப்படாத சூழலில் உள்ளுர் திரவப் பாலுக்கு வரி விதிக்கப்பட்டமை தொழில்துறையையும் அதன் பொறிமுறைகளையும் பாதித்துள்ளது.

பொதியிடல் மீது விதிக்கப்படும் 5% வரி காரணமாக, திரவப் பாலின் விலையை அதிகரிப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், திரவப் பாலின் விலையை அதிகரிப்பதற்கு இதுவரை தீர்மானிக்கவில்லை.

டொலர் நெருக்கடி காரணமாக உள்ளுராட்சி பால் நிறுவனங்கள் பயன்படுத்திய பொதிகளும் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதோடு அவற்றில் சில அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன.

சுமார் 30,000 டொலர் பெறுமதியான பொதிகள் தேசிய கால்நடை சபையின் தலையீட்டின் பேரில் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கால்நடை அபிவிருத்தி சபைச் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image