பயிலுநர் பட்டதாரிகளுக்கு நற்செய்தி

பயிலுநர் பட்டதாரிகளுக்கு நற்செய்தி

விவசாய பட்டதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுநர் பட்டதாரிகளை கமத்தொழில் திணைக்களத்திற்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொது நிருவாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை தெரிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளரின் கையெழுத்துடன் கடந்த 10ம் திகதி இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேசிய விவசாயத்துறையை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் கொள்கைக்கமைய, தற்போது அரச சேவையில் உள்ள விவசாய பட்டதாரிகள் கமத்தொழில் திணைக்களத்திற்கு உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், 01.01.2021 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்வாங்கப்பட்டுள்ள அனைத்து விவசாய பட்டதாரிகள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகளை பயிலுநர் பட்டதாரிகளாக உள்வாங்கப்படும் செயற்றிட்டத்தின் கீழ் 2020ம் ஆண்டு இணைக்கப்பட்ட அனைத்து விவசாய பட்டதாரிகள் சேவை தேவைக்கேட்ப கமத்திணைகளத்திற்குள் உள்வாங்கப்படவுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தெரிவு செய்யப்பட்ட 734 பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தேவைக்கேட்ப அவர்களை சேவையில் இணைத்துக்கொள்ளுமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image