இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு வசதி

இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு வசதி

ஜப்பானில் நிர்மாணத்துறையில் இலங்கை ஆண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் இம்மாதம் 10ஆம் திகதி மாலை 4.30 மணிக்குள் அல்லது அதற்கு முன்னராக, தங்களது விபரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்க வேண்டுமென, அப்பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பப்படிவங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk இல் பெற்றுக்கொள்ள முடியும்.

தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை عنوان البريد الإلكتروني هذا محمي من روبوتات السبام. يجب عليك تفعيل الجافاسكربت لرؤيته. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியுமெனவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image