நாட்டுக்குள் நுழைய மேலதிக பாதுகாப்பு நடைமுறைகள்

நாட்டுக்குள் நுழைய மேலதிக பாதுகாப்பு நடைமுறைகள்

தற்போது நிலவி வரும் கொரோனா தொற்றுப் பரவல் காலப்பகுதியில் இலங்கை வருபவர் தொடர்பில் மேலதிக பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை சிவில் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

குறித்த அதிகாரசபை வௌியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, நாட்டுக்கு வரும் இலங்கை கடவுச்சீட்டு மற்றும் வௌிநாடுகளின் கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்கள் என அனைவரும் வருவதற்கான அனுமதியை முன்கூட்டியே வௌிவிவகார அமைச்சிடம் அல்லது அந்தந்த நாட்டில் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தூதரகத்திடம் பெற்றுக்கொண்டிருத்தல் அவசியம்.

நாட்டிற்குள் நுழைவதற்கான அனுமதி நேரடியாக அந்தந்த அலுவலகத்திற்கு மற்றும் விமான டிக்கட் வழங்கும் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.

அதற்காக Cette adresse e-mail est protégée contre les robots spammeurs. Vous devez activer le JavaScript pour la visualiser. என்ற மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த மின்னஞ்சல் முகவரியினூடாக பயணிகள் நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதி ஜனவரி மாதம் 6ம்திகதி முதல் வழங்கப்படும். அத்துடன் அனைத்து அனுமதி செயற்பாடுகளும் இம்மின்னஞ்சல் முகவரியினூடாக முன்னெடுக்கப்படும்.

எனவே, நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதியை பெறுவதற்கு வேறு எந்தவொரு அதிகாரியினதும் மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளவும்.

இந்நடவடிக்கையானது பயணிகளின் போக்குவரத்துக்கான விசாக்களை பெறுவதற்காக வழங்கப்படுவதில்லை. இத்தொற்றுச் சூழலில் மட்டும் செயற்படுத்தப்படுகிறது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image