மேலும் 5 பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்கு

உடனடியாக அமுலுக்கு வரும் வரையில் 5 பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய, பன்னல, தும்மலசூரிய, கிரியுல்ல மற்றும் நாரம்மல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் உயர்தர மாணவர்கள் பரீட்சைக்கு சென்று வீடு திரும்ப தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தடையாக இருக்காது என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435