தேர்தலுக்கு விடுமுறை கிடைக்காத புறக்கோட்டை தொழிலாளர்கள் உடன் முறையிடவும்

கொழும்பு – புறக்கோட்டையில் கடைகளில் பணியாற்றுபவர்களுக்கு தேர்தலுக்காக விடுமுறை வழங்கப்படவில்லை என குறித்த பணியாளர்கள் எழுத்து மூலம் முறையிட்டால் அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டையில் கடைகளில் பணியாற்றுவர்களுக்கு தேர்தலுக்காக விடுமுறை வழங்கப்பட வில்லை என்று ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் வழங்கிய தேர்தல்களில் ஆணைக்குழுவின் தவிசாளர்,

புறக்கோட்டையில் கடைகளில் பணியாற்றுபவர்கள் தேர்தலுக்காக விடுமுறை கோரியபோதும், விடுமுறை வழங்கப்படவில்லை என குறித்த பணியாளர்கள் தொழில் அமைச்சிடமோ அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவிடமோ எழுத்து மூலம் முறையிட்டால் அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அவ்வாறானவர்கள் இன்று தேர்தல்கள் ஆணையாளருக்கு அல்லது நாளைய தினம் தொழில் ஆணையாளருக்கு எழுத்துமூலம் முறைப்பாடு செய்தால் அந்தப் பிரச்சினையில் தங்களுக்கு தலையீடு செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435