சைப்பரஸிற்கு மீண்டும் திரும்ப விரும்புவோருக்கு

கொவிட் 19 முடக்கல் இடம்பெற முன்னர் குறுகிய மற்றும் வருடாந்த விடுமுறை பெற்று சென்றுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் விமான பயணங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மீண்டும் நாடு திரும்ப வாய்ப்பு வழங்கவுள்ளதாக சைப்ரஸ் தெரிவித்துள்ளது.

மீண்டும் சைப்பரஸ் திரும்ப விரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சலுகை அடிப்படையில் நிபந்தனைகளுடன் கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கையர்களுக்கு இச்சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

அதற்கமைய, சைப்பரஸில் பணியாற்றுவதற்கு வழங்கப்பட்ட வேலைஅனுமதி அட்டை (Work Permit) உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் பெற்ற மூன்று மாத விடுமுறை மார்ச் மாதம் 15ம் திகதிக்கு பின்னரான தினமாக இருப்பின் எவ்வித தடையுமின்றி மீண்டும் நாடு திரும்ப முடியும். பணியில் இணைந்துகொள்ள முடியும்.

அதேபோல் 2020 ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் சைப்பரஸை விட்டு வௌியேறியிருந்தால், அவர்களின் வேலை அனுமதி அட்டையானது 2020 மார்ச் மாதம் 15ம் திகதிக்கு பின்னர் காலாவதியாகியிருந்தால் மற்றும் அந்த பணியாற்றுவதற்கான அனுமதி பத்திரம் “ Final – Not Renewable ” பிரிவுக்கு உட்படாதிருப்பின் சைப்பரஸிற்குள் நுழைவதற்கான அனுமதியை கோருவதனூடாக மீண்டும் பணிக்கு செல்ல முடியும். அதற்காக இலங்கைக்கான சைப்ரஸ் கொன்சியுலர் அலுவகத்துடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெறலாம்.

சைப்பரஸ் நாட்டில் சுமார் 5500 இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர்.

மேலதிக விபரங்களை பெறவேண்டுமாயின் சைப்ரஸ் கொன்சியுலர் காரியாலயத்தை 00357 22550030 தொடர்புகொண்டு பெறலாம்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435