ஊழியர் சம்பளத்தை ஒரு தலைபட்சமாக குறைக்க முடியாது – முதலாளிமார் சம்மேளனத் தலைவர்

ஊழியர்களின் சம்பளத்தை ஒருதலைப்பட்சமாக குறைக்க முடியாது என்று இலங்கை முதலாளிமார் கூட்டமைப்பின் தலைவர் பிரவீர் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நிறுவனங்கள் அல்லது ஏனைய அரச நிறுவனங்கள் COVID 19 ஐ மேற்கோள் காட்டி நிதி இல்லை என்று கூறி, ஒருதலைப்பட்சமாக சம்பளத்தை குறைப்பது சாத்தியமானதா என ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஒரு முதலாளிக்கும் பணியாளருக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட சம்பளம் ஒருதலைப்பட்சமாக முதலாளியால் குறைக்கப்படக்கூடாது. சம்பள குறைப்பானது ஊழியர்களின் ஒப்புதலும் மேற்கொள்ளப்படவேண்டும்.

“இவ்வாறு கூறப்பட்ட போதிலும் அண்மையில், தொழில் அமைச்சு, ஊழியர்களின் பிரதிநிதிகள் மற்றும் முதலாளி பிரதிநிதிகள் இடையே மேற்கொள்ளப்பட்ட சந்திப்பில் வரலாற்று சிறப்புமிக்க முத்தரப்பு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. அவ்வொப்பந்தத்தில், கொவிட் 19 காரணமாக அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக வேலை செய்யவோ அல்லது வேலை வழங்கக்கூடிய சந்தர்ப்பமோ இல்லாத ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது என்று ஒப்புதல் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் 2020 மே மற்றும் ஜூன் மாதங்களில் வீட்டில் இருக்கவேண்டிய கட்டாயம் உள்ள நாட்களில் அவர்களின் சம்பளத்தை 50% வரை விகிதமாக குறைக்கலாம் அல்லது மாதத்திற்கு ஆகக்குறைந்த வாழ்க்கைச் செலவுக்கு அவசியமான தொகையாக ரூ .14,500 / – என்ற குறைந்தபட்ச சம்பளத்தை வழங்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறுபுறம், ஒரு முதலாளிக்கு அதன் நிதி நெருக்கடி காரணமாக சம்பளக் கடமைகளைச் செலுத்துவதற்கான நிதித் திறன் இல்லை என்றால், அத்தகைய முதலாளிகள் சாதாரண விதிமுறைகளைப் பின்பற்றக்கூடிய ஒரு பிரத்தியேக தீர்வுக்காக தொழில் சட்டங்களுக்கமைய தொழில் ஆணையாளருக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வூடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த தொழில் அமைச்சின் செயலாளர் சரத் அபேகுணவர்தன, தற்போது நாட்டில் நிலவும் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாகவே மே, ஜூன் மாதங்களுக்காக இம்முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. எந்தவொரு ஊழியர் அல்லது முதலாளிக்கு ஏதேனும் குறைகள் இருந்தால், தொழில் பணிப்பாளர் நாயகத்தை தொடர்புகொள்வது மிகவும் வரவேற்கத்தக்கது தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435