UAE சாரதிகளுக்கு எச்சரிக்கை

எதிர்வரும் சில நாட்களுக்கு மந்தமான காலநிலை காணப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக அபுதாபி பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

நிலையற்ற தன்மையுடன் மப்பும் மந்தாரமுமாக காலநிலை காணப்படுவதனால் வீதி ஒழுங்குகளை ஒழுங்காக பின்பற்றுமாறும் வௌிச்சம் குறைவாக காணப்படுமாயின் பகல்வேளைகளிலும் ஹெட்லைட் பயன்படுத்துமாறும் சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கவனக்குறைவாக வாகனம் செலுத்துவது அபாயகரமானது என்று எச்சரித்துள்ள அபுதாபி பொலிஸார், வீதி தௌிவாக தெரியாதபட்சத்தில் மந்தாரநிலையில் மாற்றமேற்படும் வரை வாகனத்தை வலதுபுறத்தில் நிறுத்தி வைக்குமாறும் எதிர்வரும் நாட்களுக்கு ஆங்காங்கே அல்லது அனைத்து இடங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அந்நாட்டு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435