UAE இல் வசிப்போருக்கு இணையத்தளத்தை இலவசமாக பயன்படுத்தும் வாய்ப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு அங்கு வசிக்கும் அனைவரும் இணையத்தளத்தை இலவசமாக பயன்படுத்துவதற்கான அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதற்கமைய, நவம்பர் மாதம் 30ஆம் திகதிமுதல் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வரையான 10 நாட்களுக்கு Etisalat வலையமைப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அதிவேக WiFi இணைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விசேடமமாக hக வர்த்தக சந்தைகள், கெபே, கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் உட்படUAE இன் பிரபல்யமான பல பகுதிகளில் இலவச WiFi ஐ பயன்படுத்த முடியும்.

இது குறித்து எட்டிசலாட் Etisalat வலையமைப்பு வெளியிட்டுள்ள அறிவித்தலில், Etisalat WiFi வலையமைப்பின் ஊடாக வாடிக்கையாளர்கள் அதிவேக – சிறந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது.

வாழ்த்துக்கள் மற்றும் புகைப்படங்களை பரிமாறுதல், சமூக வலைதளங்களுக்குள் பிரவேசித்தல், இலவசமாக உரையாடுதல் போன்ற சந்தர்ப்பங்களுக்கு இணையத்தள சேவையை பயன்படுத்த முடியும்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு Etisalat நிறுவனம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அனைவருக்கும் நினைவுபடுத்துகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435