ATG Ceylon ஊழியர்களின் உரிமைக்காய் குரல் கொடுக்கும் சர்வதேசம்!

கட்டுநாயக்க சுதந்திரவர்த்தக வலயத்தில் இயங்கும் பிரித்தானிய கையுறை உற்பத்தி நிறுவனமான ATG Ceylon இல் பணியாற்றும் ஊழியர்கள் தற்போது உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டமையை காரணம் காட்டி அந்நிறுவனம் 5 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. பணிநீக்கம் செய்த ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு கூறியே தற்போது போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2 மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தொழில் ஆணையாளர் நாயகம் என அனைவருக்கும் தௌிவுபடுத்தியுள்ளபோதிலும் இதுவரை எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் சர்வதேச கவனம் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ATG Ceylon நிறுவன ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் தொழிற்சங்கம் மற்றும் பல்தேசிய அமைப்பினால் கடந்த கடந்த 13ம் திகதி பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

பிரித்தானியாவில் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தபட்டதுடன் அதன்போது வௌியிடப்பட்ட ஊடக அறிக்கை தமிழ் மொழி பெயர்ப்பில் கீழே தரப்பட்டுள்ளது.

தமிழ் மொழிபெயர்ப்பு

ஊடக அறிக்கை

இலங்கை மற்றும் சர்வதேச தொழிலாளர் சட்டம் மற்றும் ஒப்பந்தங்களை மீறியுள்ளதுடன் பல்வேறு மனித உரிமை துஷ்பிரயோகங்களுக்கும் ATG Ceylon தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான வர்க் வெயா உற்பத்தி நிறுவன ஊழியர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொது ஊழியர் சங்கத்தில் (FTZ –GSEU) அங்கத்துவம் வகிக்கும் ஒரு சாரார் உட்பட ஊழியர்கள் சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டமானது கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்துக்குள் இடம்பெற்ற மிக நீண்டகால போராட்டமாகும்.

இவ்விடயம் தொடர்பில் உடனடியாக செயற்படுமாறு இலங்கை அரசுக்கு தெரியப்படுத்துவதற்கான மனுவினை War on want மற்றும் ஏனைய ஒத்துழைப்பு குழுக்கள் இம்மாதம் 13ம் திகதி லண்டன் நகரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக ஒன்று கூடினர். உலக கைத்தொழில் தொழிற்சங்க குழுவுடன் இணைந்தனூடாக 6000 இற்கும் அதிகமான கையொப்பங்களும் பெறப்பட்டன.

2019 ஜனவரி மாதம் சட்டவிரோதமாக ஐந்து ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க அங்கத்தவர்களை பணிக்கம் செய்தல், வேலைநிறுத்தம் மற்றும் தொழிற்சங்க அங்கத்துவத்தில் இருந்து வற்புறுத்தி பெண்ணொருவருக்கு துன்புறுத்தி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டமை போராட்டத்திற்கு பிரதான காரணமாயின.

War on want திட்டம் மற்றும் கொள்கைக்கான பணிப்பாளர் Liz Mckean மேற்படி விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், வரையறுக்கப்பட்ட ATG Ceylon தனியார் நிறுவனத்தின் வர்க் வெயா உற்பத்தி நிறுவனமானது ஊழியர்கள் ஒற்றுமையாக இணைந்து சிறந்த வேலைச்சூழலை உருவாக்க கோரிக்கை விடுத்தமைக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கியுள்ளனர். அத்துடன் மேலதிக கொடுப்பனவும் நிறுத்தப்பட்டுள்ளது. நிறுவன எஜமானர்கள் தமது வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்கின்றார்களே தவிர ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்காமல் அவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளமல் மறுதலித்துள்ளனர்.

இலங்கை சட்ட மற்றும் ஊழியர் உரிமை தொடர்பில் கவனத்தில் கொள்ளாமை தொடர்பில் வரையறுக்கப்பட்ட ATG Ceylon சிலோன் தனியார் நிறுவனத்துக்கு எதிராக கிடைக்கப் பெற்ற முதலாவது முறைப்பாடு இதுவல்ல. மேற்படி விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுக்கிறோம் என்று கூறினார்.

மேலதிக விபரங்களுக்கு:- waronwant.org/takeactionworkerssrilanka ஊடாக பெற்றுக்கொள்ளலாம்

அறிக்கைத் தொடர்பில்:- Liz Mckean : Imckean@waronwant.org

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435