50ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 750 ரூபா நாளாந்த அடிப்படை வேதனத்துடன் 50 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தமது நாளாந்த வேதனத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்குமாறு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்தி போராடிய நிலையில், 750 அடிப்படை நாளாந்த வேதனத்துடன் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த நிலையில், அவர்களுக்கு 140 ரூபா மேலதிக கொடுப்பனவை பெற்றுத்தருவதாக அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்தது.

எனினும், 50 ரூபா நாளாந்த மேலதிக கொடுப்பனவை வழங்கவே அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டது.

இந்த நிலையில், குறித்த 50 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435