சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளரா நீங்கள்?

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவாசய மேம்பாட்டுக்காக நிதிவசதிகளை மேம்படுத்துல் மற்றும் தற்பொழுதுள்ள வரிமுறையில் தளர்வுகளை மேற்கொள்ளுதல்

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை பிரிவு தொழில் மற்றும் ஏனைய சேவை மற்றும் விவசாய அலுவல்கள் உள்ளி;ட்ட தேசிய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக பரந்துபட்ட தளர்வான அடிப்படை மற்றும் குறைந்த வரி நடைமுறையுடன் ஒழுக்கமுறையுடனும் தளர்வுபடுத்தப்பட்ட வரி நிர்வாக முறையொன்றை ஏற்படுத்துவதுடன் தேவை அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக துரிதமாக மேற்கொள்ளக்கூடிய கீழ் கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான ஒழுங்குகளை முன்னெடுப்பதற்காக நதி மற்றம் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• தேயிலை பல சரக்கு தெங்கு இறப்பர் நெல், பழவகை, காய்கறி உள்ளிட்ட எத்தகைய விவசாய வருமானம் விசேடமாக சிறு அளவிலான தொழிற்துறையாளர்களுக்கு 5 வருட காலம் வரையில் வருமான வரி விலக்கழித்தல்

• தேசிய விவசாய பொருட்களை பயன்படுத்தி பொதியிடல் நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் பெறப்படும் வமானத்தின் அடிப்படையிலான வரி வீதத்தை 28 சதவீதம் தொடக்கம்14 சதவீதம் வரையில் குறைத்தல்

• சிறிய வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் தொழில்முயற்சியாளர்களுக்கு நிவாரணமாக தற்பொழுது உள்ள 0.5சதவீதமான பொருளாதார சேவைக்கட்டணத்திற்கான வருமான எல்லையை காலாண்டுக்கு 12.5 பில்லியன் ரூபா தொடக்கம் 50 மில்லியன் ரூபா வரையில் அதிகரித்தல்

• தேயிலை இறப்பர், தெங்கு அரிசி, மற்றும் ஏனைய விவசாய பொதியிடல் தொழிற்துறைக்காக பயன்படுத்தப்படும் சூரிய Cell Panel களை பொருத்துதல் உள்ளிட்ட புதுபிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதற்கான மொத்த செலவு அதன் அலுவலகத்திற்கு அறவிடக்கூடிய வருமான கணக்கின் போது குறைக்கக்கூடிய செலவாக கவனத்தில் கொள்ளப்படுதல்

• வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடனைப்பெற்று அதன் கடன் நடைமுறைக்கமைவாக சேவையை மேற்கொள்வதற்கு முடியாது போன சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணமாக நிதி வசதிகளை பயன்படுத்தக்கூடிய நிலைமையை பெற்றுக்கொடுத்து அவ்வாறானோரின் வர்த்தக நடவடிககையை மீண்டும் ஊக்குவிப்பதற்காக நிவாரண திட்டமொன்று திறைசேரியினால் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்துதல்

• குறைந்த வருமானம் கொண்ட பயனாளிகளின் குடும்பங்களின் வாழ்க்கை செலவை குறைப்பதற்காக தற்பொழுது பொருட்கள் மற்றும் எரிபொருளின விலையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுதல்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435