சேமலாப நிதியத்தை பயன்படுத்தி வீட்டுக்கடன்

அரச ஓய்வூதியம் பெறும் தொழில் அல்லாத அனைத்து தனியார் நிறுவனங்கள், ஒப்பந்த அடிப்படையில் அரச நிறுவனங்களில் பணியாற்றுவோர், விற்பனை நிலையங்களில் பணியாற்றுவோர் அரச சார்பற்ற நிறுவனங்கில் பணியாற்றுவோர், ஹோட்டல் துறையில் பணியாற்றுவோர் ஊழியர் சேம லாப நிதியத்தை பெறும் உரிமையுடைவர்கள் ஆவர்.

இவ்வூழியர் சேம லாப நிதியத்தை மீளப் பெறுவதற்கு 55 வயதை கடக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் அதற்கு முன்னர் வீடமைப்புக் கடனை பெறுவதற்கு ஊழியர் சேம லாப நிதியத்தை பயன்படுத்த முடியும் என்பதை அறிந்தவர்கள் எத்தனை பேர்? ஊழியர் சேம லாப நிதியத்தை பயன்படுத்தி எவ்வாறு கடனை பெறலாம் என்பது தொடர்பான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

அடிப்படைத் தகைமைகள் மற்றும் தேவைப்பாடுகள்

01. சேமலாப நிதியம் உரித்தான அங்கத்தவர்களுக்கு வீடமைப்புக் கடனுக்கான பணத்தை அங்கீகரித்தல் ஊழியர் சேமலாப நிதியம் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது.

02. ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலமாக கீழே காட்டப்பட்டுள்ள எல்லைகள் வரை மாத்திரமே கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்பதாரி சேவையில் ஈடுபட்டிருப்பின் சேமலாபநிதிய வைப்புத் தொகையின் 75வீதம் வரை வழங்கப்படும்.

சேவையிலிருந்து விலகி இருப்பின் சேமலாப நிதிய வைப்புத் தொகையின் 50 வீதம் வரை வழங்கப்படும். இக்கடனானது

வீடொன்றை நிர்மாணித்தல் அல்லது வேலைகளை பூர்த்தி செய்ய.

வீடு அல்லது காணியைக் கொள்வனவூ செய்ய.

வீட்டின் ஒரு பகுதியை நிர்மாணிக்க அல்லது புதிய பகுதியொன்றைச் சேர்க்க.

அடகுக் கடன் சுமையில் இருந்து விடுதலை பெற பெற்றுக்கொள்ள முடியும்

03. மேலே குறிப்பிட்ட பிரிவூகளின் கீழ் கடன் தொகையைப் பெற்றுக்கொள்ளும் போது ஊழியர் சேமலாப நிதியத்தில் உள்ள தனது மீதியைப் பிணையாக வைத்து அங்கீகாிக்கப்பட்ட வணிக வங்கிகளிடமிருந்து கடன் பெற முடியும்.

சமர்ப்பிக்கும் முறை

ஒவ்வொரு விண்ணப்பதாரியும் வீடமைப்புக் கடனுக்கான விண்ணப்பப் பத்திரங்களை மாவட்ட தொழில் அலுவலகம் மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரங்களை மாவட்ட அலுவலகங்களிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

விண்ணப்பப் பத்திரங்கள்

ஒவ்வொரு விண்ணப்பதாரியும் வீடமைப்புக் கடனுக்காக இரண்டு விண்ணப்பப் பத்திரங்களை மாவட்டத் தொழில் அலுவலகங்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

செயற்பாட்டுப் படிமுறை

படிமுறை 01:இரண்டு விண்ணப்பப் பத்திரங்களை மாவட்ட தொழில் அலுவலகத்திடமிருந்தோ தொழில் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்தோ பெற்றுக்கொள்ளல்.

படிமுறை 02:பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரங்களை வீடு அமைக்கப்படுகின்ற பிரதேசத்தின் மாவட்ட தொழில் அலுவலகத்திடம் ஒப்படைத்தல்.

படிமுறை 03:சரியான விண்ணப்பப் பத்திரங்களுக்கிணங்க அங்கத்தவரின் காசு மீதியை பெற்றுக்கொள்ளும் பொருட்டு இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிப் பிரிவுக்கு அனுப்பி வைத்தல்.

படிமுறை 04:கணக்கில் உள்ள பணத் தொகை குறிப்பிடப்பட்ட மீதி தொடர்பான சான்றுப் பத்திரங்கள் சேமலாப நிதியப் பிரிவினால் தொழில் அலுவலகத்திற்கு அனுப்பப்படல்.

படிமுறை 05:விண்ணப்பப் பத்திரம் தொடர்பான புலனாய்வினை மேற்கொள்ளல்.

படிமுறை 06:கடனை வழங்குமாறு நிதி நிறுவனத்திற்கு ஃ வங்கிக்கு அறிவூறுத்தல் வழங்குதல்.

படிமுறை 07:நிதி நிறுவனத்திற்கு கடன் தவணைகளை உரிய வகையில் செலுத்துதல் தவணைகளைச் செலுத்தி முடித்த பின்னர் அது பற்றிய சான்றுப் பத்திரத்தை நிதி நிறுவனங்கள் தொழில் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தல்.

படிமுறை 08:தொழிற் திணைக்களத்தினால் சம்பந்தப்பட்ட கடன் தொகை செலுத்தித் தீர்க்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஊழியர் சேமலாபநிதிப் பிரிவூக்கு அறிவித்தல்.

குறிப்பு:

‘சீ’ படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரும் கடன் விண்ணப்பப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரும் வித்தியாசமானதாக அமையின் விண்ணப்பப் பத்திரம் நிராகாிக்கப்படும்.

தயாரிக்க எடுக்கும் காலம்

கடன் விண்ணப்பப் பத்திரம் ஒப்படைக்கப்பட்ட தினத்தில் இருந்து கடனை விடுவிப்பதற்கதாக 1 முதல் 3 மாத காலம் வரை.

அனுப்பிவைக்க வேண்டிய நேரங்கள்

வேலை நாட்களில் – திங்கள் மற்றும் புதன்

கருமபீடம் திறந்துள்ள நேரங்கள் – மு.ப. 09.00 முதல் 12.00 வரை

விடுமுறை தினங்கள் – அரசாங்க மற்றும் வர்த்தக விடுமுறை நாட்கள்

செல்லுபடியாகும் காலம்

விண்ணப்பப் பத்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டதில் இருந்து கடன் தொகையை மீளச் செலுத்தி முடிக்கும் வரையான காலம் அல்லது விண்ணப்பப் பத்திரம் நிராகரிக்கப்படுதல் வரையான காலம்.

சேவை தொடர்பான செலவினங்கள்

விண்ணப்பப் பத்திரக் கட்டணம்

விண்ணப்பப் பத்திரங்களுக்காக ரூ.25 ரூபா- கட்டணம் அறவிடப்படும்.

கட்டணம்:
ரூ.500.00- உச்ச வரம்பிற்கு கட்டுப்பட்டதாக புலனாய்வு மற்றும் தாபனக் கட்டணம் அறவிடப்படும்.

அபராதத் தொகை:

சம்பந்தப்பட்ட சேவைகளுக்காக எவ்விதமான அபராதத் தொகையும் அறவிடப்படமாட்டாது.

கட்டணம்:

இதற்காக கட்டணம் அறவிடப்படமாட்டாது.

அபராதத் தொகை:

கடன் விண்ணப்பதாரி கடன் தவணைகளை உரிய வகையில் செலுத்தாத சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களினால் விதிக்கப்படுகின்ற அபராதத் தொகைகளைச் செலுத்த வேண்டி நேரிடும்.

குறிப்பு:
கடன் தொகையை உரிய வகையில் செலுத்தாவிட்டால் வட்டிக்கு மேலதிகமாக அபராத வட்டியையூம் உள்ளடக்கிய கடன் தொகை சேமலாப நிதிய மீதியில் இருந்து கழிக்கப்படும்.

துணை ஆவணங்கள்

கடன் விண்ணப்பப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.சேவைப் பொறுப்புக்கள்

பதவி
பிரிவு
உதவித் தொழில் ஆணையாளர்
மாவட்ட தொழில் அலுவலகம்
சிரேட தொழில் உத்தியோகத்தர் உப தொழில் அலுவலகம்

விசேட தருணங்கள்

ஊழியர் சேமலாப நிதியத்திற்காக

தற்போது சேவையில் இல்லாதவர்களால் 50 வீதம் கடன் தொகைக்காக விண்ணப்பிக்க முடியும்.

திருமணமான வாழ்க்கைத்துணை அல்லது அவர்களின் பிள்ளைகளுடன் கூட்டாகவும் மேற்படி கடன் தொகையைப் பெற்றுக்கொள்ள விண்ணபிக்க முடியூம்.

மாதிரித் தரவுகளுடனான மாதிரி விண்ணப்பப் பத்திரங்கள்

விண்ணப்பப் பத்திரங்களை மாவட்ட தொழில் அலுவலகத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

நன்றி- தொழில் திணைக்களம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435