303 தேசிய பாடசாலைகளில் அதிபர்கள் வெற்றிடம்

இலங்கையில் உள்ள 359 தேசிய பாடசாலைகளில் 303 தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறித்த 303 தேசிய பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பம் கோரப்பட்டு, நேர்காணல் இடம்பெற்றுள்ளது. எனினும், நியமனங்கள் தற்போதுவரை வழங்கப்படவில்லை.

இதனால், 303 தேசிய பாடசாலைகளில் அதிபர்கள் இல்லை. கடமை நிறைவேற்று அதிபர்களே உள்ளனர்.

2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தேசிய பாடசாலைகளின் அதிபர் சேவை வெற்றிடம் தொடர்பான விண்ணப்பம் கோரப்பட்டபோது, நியமனங்கள் வழங்கப்படவில்லை.

அந்த நிலைமை தற்போதும் தொடர இடமளிக்க முடியாது. எனவே, அதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435