2019இல் அரச சேவையாளர்களுக்கான சம்பளம், ஓய்வூதியத்துக்கு என்னாகும்?

2019இல் அரச சேவையாளர்களுக்கான சம்பளம், ஓய்வூதியத்துக்கு என்னாகும்?அடுத்த வருடத்துக்கான செலவீனங்களுக்கு தேவையான வரவு செலவு திட்டமோ அல்லது இடைக்கால வரவு செலவு திட்டமோ இதுவரை முன்வைக்கப்படவில்லை என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்;டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த விடயம் காரணமாக எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் நாட்டில் அரச சேவையாளர்களுக்கான சம்பளம், ஓய்வூதியர்களின் கொடுப்பனவு, சமுர்த்தி பயனாளிகளுக்கான உதவிகள் எதுவும் வழங்க முடியாமல் போவதுடன் முழு அரச இயந்திரமும் செயலிழக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்னும் 2 வாரங்களுக்குள் சட்டபூர்வமான அரசாங்கம் ஒன்றை அமைத்து புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்காவிட்டால் பாரியதொரு அனர்த்தத்துக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435