2018 இல் இதுவரை 220 இலங்கை பணியாளர்கள் வெளிநாடுகளில் மரணம்

2018ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் வெளிநாடுகளில் பணிபுரிந்த 220 இலங்கைப் பணியாளர்கள் வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அவர்களுள் 52 பெண்கள் உள்ளடங்குவதுடன் 6 பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் பணியகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயிரிழந்த 220 பேரில் 145 பேர் இயற்கை காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.
25 ஆண்கள் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளனர் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் வாகன விபத்துகளால் 21 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பணியாளர்கள் குவைட், சவூதி அரேபியா கட்டார் ஆகிய நாடுகளிலேயே அதிகம் உயிரிழந்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழக்கும் இலங்கைப் பணியாளர்களின் சடலங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக இந்த வருடத்துக்குள் 7 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
வழிமூலம்: தமிழ்மிரர்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435