2018 இறுதியில் கட்டாரில் பணியாளர்களின் சம்பளம் அதிகரிக்கலாம்

2018ஆம் ஆண்டு நிறைவடையும்போது கட்டாரில் பணியாற்றும் பணியாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படும் என்றும், அதற்கான தயார்ப்படுத்தல்கள் இடம்பெறுவதாகவும் கட்டார் அரசாங்கத்தினால் எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது.
கட்டார் செய்திச் சேவை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதான செயலாளர் ஷெரன் பாரோவ், வருட இறுதியில் புதிய சம்பள முறைமையை தீர்மானிக்க எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பதுடன், பணியாளர்களுக்கு இலவசமாக கிடைக்கும் தங்குமிட வசதிகள், சுகாதார காப்புறுதி மற்றும் இலவச உணவு என்பனவற்றை வழங்குதல் உள்ளிட்ட சிறந்த சேவை சூழலை ஏற்படுத்தும் அடிப்படை நோக்கத்திலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435