8 ஆண்டுகளின் பின்னர் கட்டுநாயக்க தாக்குதலுக்கு கிடைத்தது நீதி

2011 மே 30ஆம் திகதி கட்டுநாயக்க சுத்திர வர்த்தக வலயத்தில் வைத்து அதன் ஊழியவர்களை தாக்கியதன் ஊடாக அந்த ஊழியர்களின் அடிப்படை உரிமையை பொலிஸார் மீறியுள்ளனர் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பொலிஸார் இழப்பீடடை வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை, வரவேற்பதாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய பொதுச் சேவை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 13 பேரினால் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையின்போது உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

தனியார் துறை ஊழியர்களுக்கென தனியான ஒரு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மேற்கொண்ட கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது அரசாங்க படையினரால் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அந்த சங்கத்தின் இணைப்பு செயலாளர் என்டன் மாக்கஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதலின் காரணமாக பெருமளவானோர் காயமடைந்ததுடன், ரொஷேன் சானக்க என்றவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியானார்.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், தனிநபர் விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

அதன் அறிக்கை, 2011 ஜுலை 15 ஆம் திகதி கையளிக்கப்பட்டபோதும், அது பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியபோதும், குறித்த அறிக்கையை பகிரங்கபடுத்த இந்த அரசாங்கமும் தவறியுள்ளதாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் இணைப்பு செயலாளர் என்டன் மாக்கஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், தமது தொழிற்சங்கத்தின் தொடர்புகளின் அடிப்படையில் குறித்த அறிக்கையின் பிரதி ஒன்றைப் பெற்றுக்கொள்ள தம்மால் இயலுமாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435