கூட்டு ஒப்பந்தம் குறித்து ஆராய விசேட குழு

பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் குறித்து ஆராய்வதற்காக விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் குறித்து நேற்று (07) முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தின் பங்காளர்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு ஆகியனவற்றுக்கு இடையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன்போதே குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போசகர் முத்துசிவலிங்கம், கட்சியின் உப தலைவர் மாரிமுத்து, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் விஜயகுமார், சங்கத்தின் தொழிற்சங்க ஆலோசகர் நவரட்னம், தொழிற்சங்க கூட்ட கமிட்டி தலைவர் இராமாநாதன் ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவானது தமது அறிக்கையை அடுத்த வாரம் அளவில் கையளிக்க எதிர்ப்பார்;ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில், ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் முத்து சிவலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ், மத்திய மாகாண அமைச்சர். மருதபாண்டி ராமேஸ்வரன், ஊவா மாகாண கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சக்திவேல், கணபதி கனகரஜ், உட்பட. மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் அருள்சாமி, தொழிற்சங்க கூட்ட கமிட்டி தலைவர் இராமாநாதன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள் (1)

 1. Authஅor says:

  மதிப்புக்குரிய தலைவர்களுக்கு,
  எனது தனிப்பட்ட கருத்தாக நான் கூறிக்கொள்ள விரும்புவது. தாங்காளால் இம்முறை செய்ய உள்ள சம்பள கூட்டு ஒப்பந்தத்தில்.
  உள்ளடங்கும் அனைத்து விபரங்களையும் . தொழிலாளர்களுக்கு அறிவித்து அங்கிகாரம் பெற்ற பின்னர். அதனை ஒரு ஒப்பந்தமா கைச்சாத்யிடுமாறு மிகவும் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
  நன்றி.
  பி.மோகன்.
  நாவலப்பிட்டி.

  (0)(0)

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435