ஷார்ஜா மக்கள் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து

ஷார்ஜாவின் அல் நஹ்தாவில் உள்ள அப்கோ குடியிருப்பு கட்டிடத்தில் நேற்றிரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

49 மாடிகளைக் கொண்ட குறித்த கோபுரத்தில் நேற்றிரவு 9.04 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஷார்ஜா சிவில் பாதுகாப்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சுமார் இரண்டு மணிநேர போராட்டத்தில் தீயை கட்டு்பட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 12 பேரில், ஐந்து பேர் புகை மூச்சுத்திணறலுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் 7 பேர் சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த தீ விபத்தில் இலங்கையருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியிடப்படவில்லை.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435