வீடுகளுக்குச் செல்ல முடியாமல் திணறும் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயங்களில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தமது தொழிற்சாலைகளில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் வீடுகளுக்கும் செல்ல முடியாத நிலையில் தங்குமிடங்களில் தனிமைப்பட்டுள்ளனர்.

கொரோனா அச்சம் காரணமாக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மற்றும் அதன் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து இடை நிறுத்தப்பட்டுள்ளமை ஆகிய காரணங்களினால் இவர்களில் தங்குமிடங்களில் தனிமைப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தமது தங்குமிடங்களில் உள்ள கட்டுநாயக்க சுதந்திர வர்த்தவலய தொழிலாளர்கள் அன்றாடம் தமக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான பணமின்றி அல்லல்படுகின்றனர்.

கட்டுநாயக்க, சுதந்திர வர்த்தகவலயம் தவிர்ந்த இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச்சபையின் கீழ் செயற்படுத்தப்படும் முதலீட்டு வலயங்களான பியகம, கொக்கல, பள்ளேகல, மீரிகம உட்பட வலயங்கள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் கீழ் செயற்படும் தங்கொட்டுவ போன்ற முதலீட்டு வலயங்கள், கைத்தொழில் வலயங்களாக இயங்கும் ஏக்கல, ரத்மலான ஆகியவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களும் இதே பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435