வௌிநாட்டு வேலைவாய்ப்பை விஸ்த்தரிக்க நடவடிக்கை

மத்திய கிழக்கில் மாத்திரமன்றி ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்குலக நாடுகளிலும் வேலைவாய்ப்பு வாய்ப்பை விஸ்த்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வௌிநாடு சென்று பணியாற்றும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு கடந்த வாரம் அலரி மாளிகையில் இடம்பெற்றபோதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காக பெற்றோர் வௌிநாடுகளுக்குச் சென்று உழைக்கின்றனர். அத்தகைய பெற்றோரை எண்ணி நாம் பெறுமையடைகிறோம். நமது நாட்டுக்கு அந்நியசெலாவணியையும் அவர்களே பெற்றுக்கொடுக்கின்றனர். வருடாந்த அந்நிய செலாவணி 7000 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கடந்த வருடத்தையும் இவ்வருடத்தையும் சேர்த்து மொத்தமாக 19000 மில்லியன் அமெரிக்க் டொலர் வருமானம் இலங்கைக்கு கிடைத்துள்ளது. அதில் அதிக தொகையினை உங்கள் பெற்றோரே பெற்றுக்கொடுத்துள்ளனர். உங்கள் பெற்றோர் எம் நாட்டுக்கு வழங்கும் சேவையினைப் பார்த்து வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் உங்களுக்கான புலமைப்பரிசிலை இரு மடங்காக உயர்த்தியுள்ளார்.

இம்முறை வரவு செலவு திட்டத்தில் வௌிநாட்டில் வேலை செய்வோர் வீடொன்றை கட்டுவதற்கு 10 மில்லியன் ரூபா கடன் தொகையினை வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனூடாக வௌிநாட்டில் வேலை செய்வோர் சொந்த வீட்டுக்கனவை நனவாக்கிக்கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தைச் சேர்ந்த 773 பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435