வௌிநாட்டு பணியகத்தின் விசேட அறிவிப்பு

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சேவைகள் பெற வரும் பொது மக்கள் நன்மை கருதி விசேட பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது.

புதிய பாதுகாப்பு செயற்பாட்டுக்கமைய, பைகள், பொதிகள் என்பவற்றை காரியாலய வளாகத்துக்குள் எடுத்து வர வேண்டாம் என்றும் முகம் முழுமையாக தெரியும் வகையில் உடைகளை அணிந்து வருமாறும் ஹெல்மட், ஜெக்கட்கள் அணிந்து வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீள அறிவிக்கும் வரையில் அனுமதி பெறாத எந்தவொரு வாகனமும் அலுவலக வளாகத்துக்குள் அனுமதிக்கப்படாது என்பதுடன் சேவை பெற வருபவர்களுக்கான விசேட அனுமதி அட்டையொன்று வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் பணியகம் அறிவித்துள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435