வௌிநாட்டு தபால் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

நாடு முழுவதும் உள்ள வௌிநாட்டு தபால் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

தபால் நிலையங்களில் உள்ள கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக வௌிநாட்டு தபால் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் சேவை சங்கத் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்துள்ளார்.

தபால் நிலைய கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் 6 நாட்கள் கடந்த நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஜகத் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பிரச்சினை காரணமாக வௌிநாட்டில் இருந்து இலங்கைக்கு பொதிகள் மற்றும் கடிதங்கள் அனுப்புவதில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435