வௌிநாடுகளுக்கான UAE பணப்பரிமாற்றம் வீழ்ச்சியில்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பிற நாடுகளுக்கு பணம் அனுப்பும் வீதம் 8 வீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் கடந்த இரு காலாண்டுகளை நோக்கும் போது தொழில்வாய்ப்புக்களில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 82.92 பில்லியனில் இருந்து, 80.96 பில்லியனாக இத்தொகை குறைவடைந்துள்ளது என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் காலாண்டில் 43.5 பில்லியனில் இருந்து 38.4 பில்லியனாகவும் இரண்டாம் காலாண்டில் 44.42 பில்லியனில் இருந்து 42.55 பில்லியனாகவும் இத்தொகை வீழ்ச்சியடைந்துள்ளது.

வௌிநாடுகளுக்கு அனுப்பப்படும் தனிநபர் பணப்பரிமாற்றத்தின் வருடாந்த வளர்ச்சியானது ஏப்ரல் தொடக்கம் ஜூன் வரையான காலப்பகுதியில் 4.2 வீதம் சரிவடைந்துள்ளது. இவ்வீதமானது கடந்த 2018ம் ஆண்டு 8.8 வீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435