வௌிநாடுகளில் இருந்து இன்றும் 299 பேர் நாடு திரும்பினர்

இன்று (13) ஐக்கிய அரபு இராச்சியத்தில் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து 299 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல நாடுகளில் உள்ள இலங்கையர்கள் தாய்நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அவர்களை அழைத்து வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக இன்றும் பலர் தாய்நாட்டை வந்தடைந்தனர்.

டுபாயில் இருந்து 289 பேர் மத்தள விமானநிலையத்தை வந்தடைந்தனர் என்றும் தோஹாவில் இருந்த 10 பேர் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நாடு திரும்பியவர்களுடைய உடமைகள் தொற்று நீக்கம் செய்யப்பட்டதுடன் அனைவருக்கமான பிசிஆர் பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435