வெளிநாட்டுத் தபால் – பொதி சேவைகள் மீள ஆரம்பம்: நாடுகளின் விபரம் இதோ

வெளிநாடுகளுக்கான தபால் கடிதங்கள் மற்றும் பொதிகளை தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு விமானம் மற்றும் கடல் வழி மூலமான சேவைகளை முன்னெடுப்பதில் இலங்கை அஞ்சல் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

கொவிட் 19 தொற்றின் காரணமாக தடைப்பட்டிருந்த இந்த சேவைகளை மீண்டும் மேற்கொள்ளுவது தொடர்பாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

வெளிநாட்டு தபால் கடிதங்கள் மற்றும் பொதிகள் தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு விமானம் மற்றும் கடல் வழி மூலம்.

கொவிட் 19 தொற்றின் நிலைமையின் காரணமாக விமான நிலையங்களில் வழமையான அலுவல்கள் நிறுத்தப்பட்டதையடுத்து வெளிநாட்டு தபால் மூலமான பொதிகளை பரிமாறும் பிரதான நடைமுறையான விமான தபால் சேவை முழுமையாக செயலிழந்தது.

தற்பொழுது நமது நாடு உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் விமான நிலையங்கள் கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் வரையறுக்கப்பட்ட வகையில் திறக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டிலுள்ள தமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தேவையான கடிதங்கள் மற்றும் பொருட்களை அனுப்புவதற்கு இலங்கையில் வாழும் வெளிநாட்டு பாவனையாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் ஒரு சில நிவாரணமான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தபால் திணைக்களம் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் விமான சேவை மே மாதத்தில் நடைமுறைப்படுத்துள்ள தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு (இடங்களுக்கான) விமான தபால் சேவையை பெற்றுக் கொடுப்பதற்கு இதில் வசதிகள் செய்யப்படும்.

இதற்கமைவாக ஹொங்கொங் மற்றும் மெல்பனுக்காக மே மாதம் 20ஆம் மற்றும் 27ஆம் திகதிகளிலும் பீஜிங்க்காக மே மாதம் 20ஆம் மற்றும் 23ஆம் திகதிகளிலும் ஐக்கிய இராச்சியத்தின் ஹீத்ரோவுக்காக மே மாதம் 19ஆம் மற்றும் 26ஆம் திகதிகளிலும் ஜப்பானுக்காக மே மாதம் 20ஆம் 30ஆம் திகதிகளிலும் சிங்கப்பூருக்காக மே மாதம் 23ஆம் மற்றும் 30ஆம் திகதிகளிலும் கட்டாருக்காக மே மாதம் 18ஆம் 25ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும் ஜேர்மனுக்காக மே மாதம் 18ஆம் மற்றும் 25ஆம் திகதிகளிலும் இந்தியாவில் மும்பைக்காக மே மாதம் 22ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும் சென்னைக்காக மே மாதம் 18ஆம மற்றும் 25ஆம் திகதிகளிலும் விமான சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் வெளிநாட்டில் தெரிவுசெய்யப்பட்ட இடங்களுக்கான தபால் மூலமான பொதிகளை எடுத்துச் செல்வதில் விமான சேவை வசதியை பெற்றுக்கொள்வதற்கும் தற்போதைய நிலைமையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட நாடுகளில் தபாலை விநியோகிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் மாத்திரம் தபால் மூலமான பொதிகளை தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு விநியோகிக்கபபடும்.
அதே போன்று தற்போதைய நிலைமையின் கீழ் விமான சேவையை இரத்து செய்வதிலும் , திருத்தத்தை மேற்கொள்வதிலும் தாமதம் இடம்பெறக்கூடும் என்று விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடல் மார்க்கமான தபால் மூலம் இந்த சேவையை வழங்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைவாக பிரிட்டன் ,அமெரிக்கா , அவுஸ்திரேலியா ஜப்பான் ,பிரான்ஸ், சிங்கப்பூர் ,இந்தியா ,மாலைத்தீவு, தென் ஆபிரிக்கர், கிரேக்கம், கனடா, ஹெங்கொங், டுபாய், போன்ற தெரிவு செய்யப்பட்ட நாடுகளுக்காக மாத்திரம் கடல் வழி தபால் சேவையின் மூலம் பொதிகள் மற்றும் கடிதங்களை அனுப்புவதற்காக நாட்டில் அனைத்து தபால் அலுவலகங்கள் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஹொங்கொங், டுபாய், மாலைத்தீவு போன்ற தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்காக கடிதம் மற்றும் பொதிகள் ஏற்றுக் கொள்ளும் பணி 2020ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதியுடன் நிறைவடைவதுடன்

ஐக்கிய இராச்சியத்தின், அவுஸ்திரேலியா, ஜப்பான் , பிரான்ஸ் சிங்கப்பூர், தென்ஆபிரிக்கா மற்றும் கிரேக்கம் ஆகிய தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கான கடிதங்கள் மற்றும் பொதிகளை பொறுப்பேற்கும் பணி மே மாதம் 25ஆம் திகதியுடன் நிறைவடையும்.

அமெரிக்கா , மற்றும் கனடாவிற்காக பொறுப்பேற்கப்படும் இறுதி தினம் 2020 மே மாதம் 27ஆம் திகதியாவதுடன் இந்தியாவிற்காக கடிதம் மற்றும் பொதிகளை பொறுப்பேற்கும் இறுதி திகதி 2020; மே மாதம் 28ஆம் திகதி ஆகும்.

கடல் வழிமூலம் வழமையான நிலைமையின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கான தபால் சேவையில் ; வழமையான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 2 மாதங்கள் ஆகின்றன. உலகம் முழுதும் இடம்பெறும் அனர்த்த நிலைக்கு மத்தியில் இந்த கால வரையறை தொடர்ந்தும் நீடிப்பதற்கு பெரும்பாலும் இடம்மிருப்பதை வாடிக்கையாளர்களுக்கு அறியத்தருகின்றோம் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெவிக்கப்பட்டுள்ளது.

மூலம் : News.lk

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435