வெளிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: பெண்களின் எண்ணிக்கை வீழ்ச்சி

2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2018 ஆம் ஆண்டு வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை 0.24 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

2018இல் 211,502 பேர் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளனர்.
அவர்களுள், 144,531 பேர் ஆண்களாவர். இது முழுவெளிநாடு செல்லலின் 68.3சதவீதமாகும்.

இதேநேரம், 2017இல் 143, 673 ஆண் தொழிலாளர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். இது 68 சதவீதமாகும்.

2018இல் 66, 971 பெண் தொழிலாளர்கள் தொழிலுக்காக வெளிநாட சென்றுள்ளனர். இது மொத்த வெளிநாடு செல்லலில் 31.7சதவீதமாகும்.

2017இல் 68,319 பெண் தொழிலாளர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். இது வெளிநாடு செல்லலில் 32 சதவீதமாகும்.

இந்த நிலையில், 2017உடன் ஒப்பிடும்போது, 2018இல் வெளிநாடு செல்லும் பெண்களின் எண்ணிக்கை 0.3சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு, பெண் தொழிலாளர்களைவிட 77,650 ஆண் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்காக பணிக்கு சென்றுள்ளனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435