வீட்டுப்பணியாளர்களுக்கும் ETF அங்கத்துவம்

வீட்டுப்பணியில் ஈடுபடுவோரையும் ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்துவர்களாக இணைத்துக்கொள்ளும் செயற்பாடு அண்மையில் நாராஹேன்பிட்டவில் இடம்பெற்றது.

ப்ரொடெக்ட் தொழிற்சங்கத்தினால் கெயார்கோல் வீட்டுப்பணி உதவியாளர்களுக்கு இவ்வாறு ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்துவம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வு கடந்த 8ம் திகதி தொழிற்சங்க அலுவலகத்தில் இடம்பெற்றது.

வீட்டுப்பணியையும் கண்ணியமான வேலை தரத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

ஊழியர் நம்பிக்கை நிதியம் சார்பில் சுனில் ரத்னாயக்க கலந்துகொண்டதுடன் வீட்டுப்பணியாளர்களுக்கு ஊழியர் நம்பிக்கை நிதியம் எந்தளவுக்கு அவசியம் என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435