விஸா நடைமுறையை தளர்த்துகிறது சவுதி – வெளிநாட்டவர்களுக்கு புதிய சலுகை

சவூதி அரேபியாவில் இடம்பெறும் விசேட விளையாட்டு மற்றும் முக்கிய நிகழ்வுகளை பார்வையிடுவதற்காக வெளிநாட்டவர்களுக்கு விஸா வழங்க சவுதி அரேபியா தாயராகிவருகிறது.

இதற்கமைய, இந்த விஸா வழங்கும் நடைமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்க உள்ளதாகவும், வெளிநாட்டவர்களை கவரும் நோக்கிலும், சுற்றுலா பயணிகள் தொடர்ச்சியாக சுற்றுலா மேற்கொள்ளும் இடமாக மாற்றுவதற்கணிகான நோக்கத்துடன் இந்த விஸா வழங்கும் நடைமுறை ஆரம்பிக்கப்படுவதாக சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேபோல், உயர் பொருளாதாரத் தரத்தை கட்டியெழுப்பவும், சவுதி பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் இந்த விஸாக்களை வழங்குவதற்கான நோக்கம் ஆகும்.

இதுவரைக் காலமும் சவூதி அரேபியாவில் வெளிநாட்டவர்களுக்கு விஸா வழங்கும் நடைமுறை மிகவும் வரையறுக்கப்பட்டிருந்ததாய் இருந்த நிலையில், இந்த புதிய விஸா நடைமுறைக்கு அமைய விஸா சட்டம் ஓரளவிற்கு தளர்த்தப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளைக் காணவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் இருப்பவர்களுக்கு இந்த செய்தி மிகவும் பயன் தருவதாக அமையும் என பலர் கூறுகின்றனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435