விடுமுறைகள் இரத்து: ரயில்வே பணியாளர்கள் உடன் சேவைக்கு திரும்பவேண்டும்

 

ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக அனைத்து பணியாளர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அனைத்து பணியாளர்களும் உடனடியாக சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து சேவைகள் அமைச்சின் செயலாளர் எல்.பீ.ஜயம்பதி, ரயில்வே பொது முகாமையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ரயில் சேவையை தடையின்றி முன்னெடுப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதன் முன்னேற்ற நடவடிக்கைகளை ஜனாதிபதிக்கு அறிக்கையிடும் வகையில் தனக்கு அறியப்படுத்துமாறும், அந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியது, திணைக்களப் பிரதானி என்ற அடிப்படையில் ரயில் வே பொது முகாமையாளரின் பொறுப்பாகும் என்றும் அமைச்சின் செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ரயில்வே பொது முகாமையாளர் குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435