வட மாகாண ஆசிரியர்களுக்கு 3 மாதகால விடுமுறை: ஆளுநரின் முக்கிய அறிவித்தல்

வட மாகாண ஆசிரியர்களுக்கு எவ்வாறு 3 மாத காலத்திற்கு விடுமுறை வழங்குகின்றார்களோ என தனக்குத் தெரியாது என்றும் இது தொடர்பில் ஆராய்ந்து கொண்டிருப்பதாகவும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் வலிகாமம் வலயகல்வி அலுவலகம் நடத்திய ஆசிரியர் கௌரவிப்பு விழா நேற்று முன்தினம் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போது வடமாகாண ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

வடமாகாண ஆசிரியர்கள் திருமணம் மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்காக மூன்று மாத விடுமுறையினை பெற்றுக்கொள்கின்றார்கள். இதனால் இங்கு மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிப்படைகின்றது. இந்த பாதிப்புக்கு நானும் ஒரு காரணமாகின்றேன்.

ஏன் எனில் ஆசிரியர்களுக்கு விடுமுறைக்கான அனுமதி வழங்குபவன் நானே. அதிபர்கள், வலய கல்விப்பணிப்பாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் விடுமுறைக்கு அனுமதி வழங்கி இறுதியில் என்னிடம் அனுப்புகின்றார்கள். அதில் நான் கையொப்பம் இடுகின்றேன். எவ்வாறு 3 மாத காலத்திற்கு விடுமுறை வழங்குகின்றார்களோ என எனக்கு தெரியாது. இது தொடர்பில் ஆராய்ந்து கொண்டிருக்கின்றேன்.

நான் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா நடத்தி அவர்களுக்கு தங்கப் பதங்களை வழங்கியிருந்தேன். சிறந்த சேவை ஆற்றுபவர்களை இது போன்று பாராட்டி ஊக்குவிப்பது எமது கடமை ஆனால் வடமாகாணத்தில் அதிகளவில் விடுமுறை எடுக்காது சேவையாற்றும் ஆசிரியர்களை பாராட்டுவதற்கு திட்டம் ஒன்றினை உருவாக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

வழிமூலம்: வீரகேசரி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435