வடக்கில் கடமைகளை பொறுப்பேற்காத ஆசிரியர்களுக்கான அறிவித்தல்

பின்தங்கிய பிரதேசங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு இதுவரை கடமைகளை பொறுப்பேற்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே உத்தரவிட்டுள்ளார்.

துணுக்காய் மற்றும் கல்வி வலயத்திற்பட்ட அதிபர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது அதிபர்களினால் ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இந்த உத்தரவினை அதிபர்கள் மத்தியிலேயே ஆளுநர் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்தார்.

துணுக்காய் கல்வி வலயத்திற்கு 270 ஆசிரியர்கள் தேவையாக இருக்கின்றது. 31 நிரந்தர அதிபர்கள் இல்லாத பாடசாலைகள் இயங்குகின்றன. இங்கு 8202 மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என வலயக்கல்விப் பணிப்பாளர் பி.ரவிச்சந்திரன் ஆளுநரிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் கல்வி அமைச்சினால் கடந்த ஆண்டு 36 ஆசிரியர்களுக்கு துணுக்காய் கல்வி வலயத்திற்கு மாற்றம் வழங்கப்பட்ட போதும் 6 பேர் மட்டுமே கடமைகளை பொறுப்பேற்றிருந்தனர்.

எஞ்சியவர்கள் கடமைகளை பொறுப்பேற்காது இருகின்றனர். இவர்கள் கடமைகளை பொறுப்பேற்காததன் காரணத்தினையும் இதற்காக உயர் அதிகாரிகள் அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்பது தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு இதன்போது பணித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே நேற்று பிற்பகல் கிளிநொச்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை அதிபர்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் ரி.யோன்ஸ் குயின்ரஸ் தலைமையில் கிளிநொச்சி மகாவித்தியாலத்தில் நடைபெற்றது.

பின்தங்கிய பகுதிகளிலிருந்து 2019ம் ஆண்டு வருடாந்த இடமாற்றம் செல்லும் ஆசிரியர்களுக்கு பதிலாக ஆசிரியர்கள் கடமைகளை பொறுப்பேற்காத வரையில் அவர்களை பாடசாலைகளிலிருந்து விடுவிக்க வேண்டாம் என்ற கண்டிப்பான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

பின்தங்கிய பாடசாலைகளிலிருந்து ஆசிரியர்கள் உடனடியாக இடமாற்றம் பெற்று செல்கின்றபோதும் யாழ் வலயம் போன்ற வசதிகள் உடைய பாடசாகைளிலிருந்து கஷ்டப்பகுதிக்கு ஆசிரியர்கள் செல்வது தாமதம் ஆவதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படுகின்றது. இதனை கருத்தில் கொண்டு உங்களது பாடசாலையிலிருந்து ஒரு ஆசிரியர் மாற்றம் பெற்றால் அந்த இடத்திற்கு ஒரு ஆசிரியர் வரும்வரையில் பாடசாலை அதிபர்கள் ஆசிரியரை விடுவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இதற்கு மேலதிகாரிகளோ அரசியல்வாதிகளோ அழுத்தம் பிரயோகித்தால் அது தொடர்பில் தம்மிடம் முறையிடுமாறும் அவர் அதிபர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் பாடசாலை ஆசிரியர்களுக்கான விடுமுறைகளை வழங்கும்போது அவர்களுக்கான பதில் கடமையாற்றும் ஆசிரியர்களின் கைப்பட சம்மதக் கடிதங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்திய ஆளுநர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் ஆசியர்களுக்கான விடுமுறை காலத்தினை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக விமர்சனங்கள் எழும் நிலையில் கடந்த ஆறு மாத காலப்பகுதியினுள் 450க்கு மேற்பட்ட ஆசியர்கள் வெளிநாடு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக தம்மிடம் விடுமுறை அனுமதி பெற்றிருப்பது கவலை அளிப்பதாக தெரிவித்தார். இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை மிகவும பாதிக்கப்படுகின்றது. வடமாகாணத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் ஆளுநர்; கோரிக்கை விடுத்துள்ளார்.

பதில் கடமை நிறைவேற்றும் அதிபர்களாக செயற்படும் அதிபர்களுக்களுக்கு அனுகூலங்ளை ஏற்படுத்தக் கூடிய வகையிலான திட்டங்களை தயாரிப்பதற்காக வடமாகாணத்தில் பதில் கடமை நிறைவேற்றும் அதிபர்களின் கல்வி தகமை சேவைக்காலம் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய பட்டியலினை சமர்ப்பிக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டங்களின் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன், உதவிச் செயல் ஏ.எக்ஸ்.செல்வநாயகம், மாகாண கல்விப் பணிப்பாளர் உதயகுமார் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435