றமழான் மாதத்தில் மேலதிக நேரம் பணியாற்றினால்…

புனித றமழான் மாதத்தில் தனியார், பொதுத்துறையினரின் வழமையான வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், சில துறைகளில் பணியாற்றுகின்றவர்கள் தேவையிருப்பின் இரண்டு மணித்தியாலங்கள் மேலதிகமாக பணியாற்ற முடியும். அவ்வாறு பணியாற்றுகின்றவர்கள் மேலதிக வேலைக்கான கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும் என்று ஐக்கிய அரபு இராச்சிய மனித வள அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலதிகமாக இரண்டு மணித்தியாலங்கள் 9.00 மணிக்கு முன்னர் பணியாற்றினால் உங்கள் வழமையான சம்பளத்துடன் மேலதிகமாக 25 வீதம் சேர்க்கப்படும். அதாவது மணித்தியாலத்திற்கு 100 திர்ஹம் சம்பளம் என்றால் உங்கள் 125 திர்ஹம் மணித்தியாலத்திற்கு வழங்கப்படும்.

மேலதிகமாக இரவு 9.00 தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரையான காலப்பகுதியில் மேலதிகமாக 2 மணித்தியாலங்கள் பணியாற்றினால் 50 வீதம் சம்பளத்தில் சேர்க்கப்படும். அதாவது 100 திர்ஹம் சம்பளத்துடன் மேலதிகமாக 50 சேர்க்கப்பட்டு 150 திர்ஹம் சம்பளம் வழங்கப்படும்.

பொதுத்துறையினரின் வேலைநேரம் 5 மணித்தியாலங்களாக குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, தனியார்துறையினரின் வேலைநேரம் 2 மணித்தியாலங்களினால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435